பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

🕔 November 19, 2015

Agilaviraj kariyavasam - 014பாடசாலைகளுக்குள் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு, ஊவா மாகாண முதலமைச்சர் விதித்த தடையானது, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏற்புடையதாகாது என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு, அந்த மாகாண முதலமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

இவ் விடயம் குறித்து, கல்வியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த போதே, அவர் மேற்கண்ட பதிலைக் கூறினார். இது தொடர்பல் அவர் மேலும் கூறுகையில்;

பாடசாலைகளில் கற்பிக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த மாட்டார்கள் என, தான் எதிர்பார்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்