அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது

🕔 November 2, 2020

மெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை 03ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக புதிய கருத்து கணிப்பு மூலம் தெரிய வருகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.

என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பைடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

அரிசோனா, புளோரிடா, ஜோர்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர், பென்சில்வேனியா உட்பட்ட 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பைடன் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 29 முதல் 31 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள், டிரம்ப் – கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதத்தை தவறு என்று கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்