கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை

🕔 October 7, 2020

னியார் வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அந்தந்த மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மீள் அறிவிப்பு வரும்வரை இந்த தற்காலிகத் தடை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்