கசிப்பு பருகிய 08 வயது பிள்ளை, வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 22, 2020

சிப்பு பருகிய 08 வயது பிள்ளையொன்று ஹல்தும்முல்ல – மாவட்ட வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிள்ளைக்கு பலவந்தமாக கசிப்பு புகட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

ஹல்தும்முல்ல – நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் உள்ளார். தந்தை போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிள்ளையின் மாமா உறவு முறையான ஒருவரைக் கைதுசெய்வதற்காகவும்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்