400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

🕔 July 6, 2020

– க. கிஷாந்தன்

றாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே  விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments