அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது

🕔 March 21, 2020

“வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 மணித்திலியாலத்திலிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 03ஆம் நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்கிற புகாரின் அடிப்படையிலே, ட்விவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி ட்வீட் செய்திருந்த நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றையும் இன்று பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 -லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 -வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்”.

“இதேமாதிரி இத்தாலியில் கொரோனா இரண்டாவது நிலையில் இருந்த போது அந்நாட்டின் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மக்கள் உதாசீனப்படுத்தியதால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதைப்போன்ற ஒரு நிலை இந்தியாவில் வந்துவிடக்கூடாது.

ஆகவே பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 22-ம் திகதி பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுபோம். கொரோனா வைரஸைத் தடுக்க, சரிசெய்ய உயிரை பணையம் வைத்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை பிரதமர் சொன்னது போல் மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பத்தார் நலமாக வளமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்” என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த வீடியோவில், “வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 -லிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 3 -வது நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று பலரும் புகாரளித்தனர். இதையடுத்து வீடியோ பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது .

ஆயினும் யூடியூபில் தற்போது அந்த வீடியோ பதிவை பார்க்க முடியும்.

தொடர்பான செய்தி: ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர்

ரஜினி பேசி வெளியிட்ட வீடியோ

Comments