கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு

🕔 March 13, 2020

னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்