சிறையிலிருந்தவாறு பொதுத் தேர்தலில் போட்டியிட, பிள்ளையானுக்கு அனுமதி

🕔 March 13, 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், சிறையிலிருந்தவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 25 திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட 05 பேர் சந்தேகத்தில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில் சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்த நிலையில் நேற்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments