550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 March 4, 2020

க. கிஷாந்தன்

ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள், தேள்கள், தவளைகள், பள்ளிகள், நத்தைகள், சிலந்திகள், பாம்புகள் உட்பட 550 உயிரினங்களை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த பெட்டிகளில் அடைத்து, கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கையிலேயே வனத்துறை அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட உயிரினங்களுள், உயிருடன் இருப்பவற்றை விடுவிப்பதற்கும், ஏனையவற்றை ஆய்வுக்காக அனுப்புமாறும், உயிரினங்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன திரவியத்தை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நீதிமன்றம் பணித்தது.

இம்மூவரும் பலவகையான ரசாயண திரவியங்களைப் பயன்படுத்தியே ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து இந்த உயிரினங்களை பிடித்துள்ளனர் என்றும், விலங்குகளுக்கான சிறப்பு கொள்கலனகளில் அடைத்தே அவர்றை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர் என்றும் வனத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேக நபர்கள் பெப்ரவரி 12 ஆம் திகதியே நாட்டுக்கு வந்துள்ளனர். உயிரினங்களை சேகரித்துக் கொண்டிருக்கையில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த இடமும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்