‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

🕔 December 10, 2019

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களைப் புரிந்த ‘கலு துஷார’ என்று அழைக்கப்படும் முதியன்சலாகே துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் 59 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், இவரை கைது செய்திருந்தனர்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு வேறு வேறாக மரண தண்டனை விதிக்கப்படுவதாக, நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Comments