சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

🕔 December 5, 2019

ஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை அடுத்து, மீண்டும் அன்றிரவே மார்ச் 03ம் திகதி வரை ஒத்தி வைக்கப்படும்.

இதற்கிடையில் பெப்ரவரி 25ம் திகதியை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 27ம் அளவில் பொது தேர்தல் நடத்தப்படும்.

இடையில் நாடாளுமன்றம் கூட்டப்படாது. ஆகவே இன்றைய தினம் சஜித் பிரேமதாஸவுக்கு தரப்பட்டதாக சொல்லப்படும், எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆக போவதில்லை.

ஏப்ரல் நடைபெறவுள்ள தேர்தலில் மிக குறைந்த ஆசனங்களை பெறும்வகையில், ஐக்கிய தேசிய முன்னணியை பலவீனப்படுத்தி, மறுபுறம் பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மை பெற திட்டமிடப்பட்டு காய் நடத்தப்படுகிறது.

இந்த சவால்களை வென்று மீள்வது தொடர்பில் பல காய் நகர்த்தல்களை நாமும் திட்டமிட்டுள்ளோம். விரைவில் அவை தெரிய வரும்.

Comments