எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித்; சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிவிப்பு

🕔 December 5, 2019

க்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் கணிசமான உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்து வந்த போதிலும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தரப்பில் இதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையிலே, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு தற்போது சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்கவின் சம்மதத்துடன், அகிலவிராஜ் மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Comments