காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் பொதுச் சந்தைக்குச் ‘சீல்’; கால வரையறையின்றி மூடப்படுவதாக நகர சபை அறிவிப்பு

🕔 December 5, 2019

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி – 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை, காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“குறித்த பொதுச் சந்தையில் பல வருட காலமாக சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன. மழை காலங்களில் இந்த சந்தப் பகுதி முற்று முழுதாக வெள்ளத்தில் தாழ்வதாக பொது மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்து வந்தனர்.

இது தொடர்பில், நாங்கள் பல வேண்டுகோள்களை விடுத்திருந்தோம். ஆனால் எந்த வேண்டுகோளையும் பள்ளிவாயல் நிருவாகம் கணக்கெடுக்கவில்லை. கடந்த பல நாட்களாக நகர சபைக்கு பொது மக்கள் பல்வேறு முறைப்பாடுகள் செய்த வண்ணமுள்ளனர்.

எங்களுடைய உத்தியோகத்தர்கள் நேரடியாக பார்வையிட்ட சமயம் உடனடியாக இந்த சந்தையை நகர சபை கட்டளைச் சட்டத்திற்கமைய மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேய சமயம் எங்களுடைய நகர சபை விஷேட கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்ட  தீர்மானத்துக்கமைவாகவும் இச் சந்தையை சீல் வைத்துள்ளோம். அத்தோடு கால வரையரையின்றி குறித்த சந்தை மூடப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிக்கின்றோம்” என்றார்.

சுகாதார சீர்கேடு, பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி, மேற்படி சந்தை குறித்து காத்தான்குடி நகரசபைக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளுக்கமைய பொதுச் சந்தையை அதிரடியாக மூடும் நடவடிக்கையில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்