நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

🕔 December 2, 2019

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் – அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றும், குறித்த அதி விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கிணங்க, நாடாளுமன்றத்தை ஜனாதிபதிக்கு இவ்வாறு ஒத்தி வைத்துள்ளார்.

அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் 03ஆவது உப பிரிவின் படி, நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைக்கும் காலம், இரண்டு மாதத்துக்கு மேற்பட்ட காலமாக இருத்தல் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்