க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம்

🕔 December 2, 2019

.பொ.த. சாதாரண தர பரீட்சைகள்  இன்று ஆரம்பமாகியது. இந்தப் பரீட்சைகள்  எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையும்.

இம்முறை நாடளாவிய ரீதியில் 07 லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். 

பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன.  இவற்றில் 08 விஷேட பரீட்சை நிலையங்களாகக் காணப்படுகின்றன. 

சிறை தண்டனை அனுபவித்து வரும் சந்தேக நபர்கள் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்காக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பரீட்சாத்திகளுக்காக மஹரகம வைத்தியசாலையில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 

சார்க் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள விளையாட்டு வீரர்களுக்காக நேபாளம் காத்மன்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 

மேலும் ஹோமாகம சுனீத வித்தியாலயம், இரத்மலானை அந்த வித்தியாலயம், தங்கல்ல , ஹலாவத்தை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களிலும் விஷேட பரீட்சை நிலையங்கள்  நிறுவப்பட்டுள்ளன. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்