லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை

🕔 November 30, 2019

– அஹமட் –

ஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்று, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த – தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம் நடத்தும் இந்த பயிற்சிப்பட்டறையில், அதன் தலைவர் சி. தொடாவத்தை, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தாஹா முஸம்மில், அமீர் ஹுசைன் மற்றும் ஆனந்த ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் லஞ்ச, ஊழல் செயற்பாடுகளை இனங்காணுதல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பிலான சட்டங்கள் மற்றும் நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவற்றை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவுரை வழங்கப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பயிற்சிப்பட்டறை தொடரவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்