மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக

🕔 November 23, 2019

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவை ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக தெரிவிக்கையில்; தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினார், தன்னால் கண்ணியமாக வெளியேற முடியாது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிடம் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜிநாமா செய்தால், திலங்க சுமதிபாலவுக்கு அரச நிறுவனமொன்றில் உயர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments