ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

🕔 November 21, 2019

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக, அரும்பொருட் காட்சியகம் ஒன்றினை அமைத்தார் எனும் குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கிலிருந்தே அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

03 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதேவேளை, கோட்டாவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையினையும் நீக்கியதோடு, நீதிமன்றின் வசம் வைக்கப்பட்டிருந்த அவரின் கடவுச்சீட்டையும் வழங்குமாறு விசேட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்