முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன காலமானார்

🕔 November 19, 2019

முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை வயதில் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

1931ஆம் ஆண்டு பிறந்த இவர் கம்பளை தொலுவ மகா வித்தியாலத்தில் கல்வி கற்றதோடு, அதே பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் தொலுவ தபால் நிலையத்தில தபால் அதிபராகவும் கடமையாற்றினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் பிரதம மந்தியாகப் பதவி வகித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களில் டி.எம். ஜயரத்னவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments