பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு

🕔 November 17, 2019

– முன்ஸிப் அஹமட் –

னாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெனாண்டோ மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் தமது, அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘நாளை புதிய பிரதமரும் பதவி ஏற்கும் போது எல்லா அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இழப்பர். அதுவே ஜனநாயக சம்பிரதாயம். இந்நிலையில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது என்பது ஒரு நகைச்சுவை’ என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவளித்து செயற்பட்ட அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிளார் பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளதாக கபீர் ஹாசிம் சற்று முன்னர் தெரிவித்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்