பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு

🕔 November 9, 2019

ந்தியா அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும்.

மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சுன்னி வக்ஃபு வாரியத்துக்கு வேறு இடத்தில் 05 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும்.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும்.

கோயில் கட்டுவதற்கு 3 – 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்