நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

🕔 November 7, 2019

னாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவினைப் பெறும் ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கப் போவதாக, வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தொலைக்காட்சியொன்றில் இன்று பகல் நேரடியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளும், மக்கள் ஆணையுடனும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

அதிகார பேராசைகொண்ட சிறு குழுவுக்கு நாட்டைச் சீரழிக்க இனி ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதன் அடிப்படையில் புதிய அமைச்சரவையில் திறமையுள்ள இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும், அரசியல்வாதிகளின் உறவினர்கள் – சிபாரிசின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்