01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு

🕔 November 5, 2019

னாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.

வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு 26 அங்குலம் நீளமானதாக அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments