ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து

🕔 November 1, 2019

க்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments