இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம்

🕔 November 1, 2019

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்துப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் அதிகம் என்பதனால், அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும். அதன்போது ஏற்படும் செலவினைக் குறைப்பதற்காகவே, ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

இந்த வாக்குச் சீட்டுப் பெட்டியொன்றுக்கான செலவு 1500 ரூபாய் மாத்திரமேயாகும்.

இதுவரை பயன்பாட்டில் மரப் பலகைகளினால் ஆன வாக்குச் சீட்டுப் பெட்டிகளே இருந்து வந்தன. அந்தப் பெட்டி ஒன்றுக்கான விலை 8500 ரூபாய் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், உலகில் பல நாடுகளில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்