ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன?

🕔 October 31, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த வேலையினை தாம் விரும்பிய ஒப்பந்தகாரருக்கே வழங்கி, அந்த வேலையினை முன் கொண்டு செல்வதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் குறித்த வீதிப் புனரமைப்பு வேலையை ஒப்பந்தகாரருக்கு வழங்கும் பொருட்டு, 17 செப்டம்பர் 2019ஆம் திகதி பகிரங்க விலைமனுக் கோரும் அறிவித்தல் விடுக்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் தெரிவித்திருந்தார். ஆயினும், அவ்வாறு பகிரங்க விலைமனுக் கோரப்படவில்லை என்பது – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவரால் கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும், தமக்கு விருப்பமான ஒப்பந்தகாரர் ஒருவருக்கு மோசடியான வகையில், 36 லட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீதிப் புனரமைப்பு வேலையினை, அட்டாளைச்சேனை பிரதேச செயகலம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில், மோசடிகள் இடம்பெற்றுள்ள குறித்த வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் மேற்படி ஊடகவியலாளர் கோரிக்கை விடுத்ததோடு, இது குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முறையிட்டிருந்தார்.

ஆயினும், குறித்த வீதி புனரமைப்பு வேலையினை தாம் மோசடியாக வழங்கிய ஒப்பந்தகாரரைக் கொண்டே செய்வதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் முயற்சித்து வருகின்றனர்.

ஒரு தொகைப் பணத்தை ஒப்பந்தகாரரிடம் பெற்றுக் கொண்டு, இவ்வாறு மோசடியாக மேற்படி வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில அதிகாரிகள் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்பான செய்தி: விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்