“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

🕔 October 31, 2019

– அஹமட் –

ஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில் தன்னுடைய அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வழங்கப்படும் ஒருவராக சரத் பொன்சேகாவை மட்டுமே தற்போது பெயர் குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சஜித் ஆட்சியில் தானே பிரதமராக பதவி வகிக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

தன்னுடைய அமைச்சரவையில் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்கப் போவதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இதேவேளை மோசடியில் ஈடுபட்டோர், நாட்டுக்கு எதிராக செயற்பட்டோரை தமது அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவானால், யார் பிரதமராக நியமிக்கப்படுவார் என்கிற கேள்விகள் எழுந்துள்ள போதிலும், அதற்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே, சஜித் ஜனாதிபதியானால் பிரதம மந்திரியாக தானே பதவி வகிக்கப் போவதாக ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார்.

இந்த நிலைவரமானது ரணில் மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகலை வெளிப்படுத்துகின்றதா? எனும் கேள்வியை தோற்றுவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்