ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

🕔 October 27, 2019

.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விசேட தாக்குதல் படைகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், அறிக்கையொன்றை வெளியிடுவார் என, வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால், எது தொடர்பான அறிக்கை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கவில்லை.

பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதனை உறுதிசெய்துகொள்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1971ஆம் ஆண்டு பிறந்த அல் பக்தாதி, ஈராக்கில் பிறந்தவராவார்.

Comments