40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

🕔 October 20, 2019

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

40 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற போதே, இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் 03 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments