சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபா வரையில் பேரம்: தயாசிறி குற்றச்சாட்டு

🕔 October 19, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதான கட்சிகள் பேரம் பேசுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

100 மில்லியன் ரூபாய் வரையில் பேரம்பேசப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்று வழங்கியுள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதானக கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க, சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments