தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்

🕔 October 17, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், தனது மோசடியை மறைப்பதற்காக அங்குள்ள வேறு நபர் ஒருவர் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியமையை ‘புதிது’ ஊடகம் பொறுப்புடன் வெளிக் கொண்டு வருகின்றது.

மேற்படி அஸ்லம் என்பவர், தனது நெற் காணியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயர் சட்டவிரோதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தின் மூலம் மண் கொட்டியதை, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் அம்பலப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததோடு, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

மேற்படி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதகாவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வந்தது.

எவ்வாறாயினும், தன்மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் வகையிலும், தன்னை புனிதமானவராகக் காட்டும் நோக்கிலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் பற்றிய பல்வேறு தகவல்களை, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அஸ்லம் தெரிவித்து வந்தார்.

ஆயினும், அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகளை ‘புதிது’ செய்தித்தளம் அம்பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் தொடர்பில், ‘புதிது’ செய்தி ஆசிரியரைத் தொடர்பு கொண்டு அஸ்லம் வழங்கிய தகவல்களை இங்கு வழங்குகின்றோம்.

புதிது ஆசிரியர்: இன்று நியுஸ் போட்டிருக்கிறம்

அஸ்லம்: பார்த்தேன், நல்ல விடயம். அதில் ‘க’ வை (கணக்காளர் என்று) சேர்த்து விட்டிருக்கலாமே… பொதுவாக போடாமல். டிசிபி (நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு) வேலைகளும் வந்திருக்கிறது. அதில் இவர் கொமிசன் கேட்டிருக்கார் கடைகளில்.

புதிது ஆசிரியர்: யாரு?

அஸ்லம்: யாரு கேட்கிறது… இவருதான்…

புதிது ஆசிரியர்: யாருக்கிட்ட

அஸ்லம்: சனூஸ்…. சனூஸ்… ஸ்போர்ட்ஸ் ஐட்டம் எடுக்கிற சனுஸ்கிட்ட… அதை கொஞ்சம் முகருங்க… (தேடிப்பாருங்கள்). இவர் அப்படியே வழித்துத் துடைத்து நக்கிக் கொண்டு போகிறார்.

புதிது ஆசிரியர்: றிபாஸ் (கணக்காளர்) அங்கே இருக்க ஏலாது…

அஸ்லம்: அவர் ஆள், டேஞ்சர் ஆள்… ஓப்பணா (வெளிப்படையாக) கோல் (தொலைபேசி அழைப்பெடுத்து) அவருக்குச் சொல்லுங்கள்… இதைச் கொஞ்சம் உள்ளுக்குப் பாருங்க… தகவல் வந்துக்கிட்டே இருக்கும்.

உ….. ஓ….(தூஷணம் சொல்கிறார்) அவர்ர கணக்குத்தான் பாக்குற…

அஸ்லம் – குரல் பதிவு

தொடர்பான செய்திகள்:

01) அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்

02) பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல்

Comments