அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

🕔 October 15, 2019

ரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதிகள் சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகியோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

Comments