சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்

🕔 October 10, 2019

ருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நாளைய தினம் இவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் பயணித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 31 பொது கூட்டங்களை, பிரதான பொதுக் கூட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments