ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்: இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண்

🕔 October 5, 2019

– மப்றூக் –

னாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போருட்டு, இதுவரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவர்களில் இருவர் முஸ்லிம்கள், ஏனையோர் சிங்களவர்கள். இந்த 33 பேரில் ஒருவர் பெண் வேட்பாளர்.

கட்டுப் பணம் செலுத்தும் இறுதித் தினம் நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நாளை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள இரண்டு முஸ்லிம்களில் ஒருவர் இல்யாஸ் ஐதுரூஸ் முகம்மட். இவர் கடந்த 2015 மற்றும் 2010ஆம் ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

மற்றையவர் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சோஷலிச கட்சி சார்பில் அஜந்தா விஜேசிங்க பெரேரா எனும் பெண் ஒருவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள முஸ்லிம்கள் இருவரும் சுயேட்சையாகப் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்களே போட்டியிட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்