போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர்

🕔 September 24, 2019

– எஸ். அஷ்ரப்கான் –

ந்தியாவில் நடைபெறும் போதைப் பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில்  கல்முனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை இந்தியா பயணமானார்.

போதைப் பொருளுக்கு எதிரான உலக சம்மேளனம் – சுவீடன், போத் வேயார் மன்றம் – இந்தியா மற்றும் புரஜெக்ட் வென்டா அமைப்பு  அத்துடன் போதைப் பொருள், குற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்துள்ள ‘போதைப் பொருளினால் எழும் பிரச்சினைகளை ஒன்றிணைந்து ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்தியா கொச்சி நகரில் செப்டம்பர் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில், போதைப் பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாடு இடம்பெறுகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தஸ்தகீர், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் சுகாதாரம், போதைப்பொருள் மற்றும் தொற்றா நோய்களுக்கு பொறுப்பான செயற்திட்டத் தவிசாளராவார்.

இப் பிராந்திய மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 120 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்