கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்

🕔 September 20, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று செலுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 09 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் கட்டுப்பணம் நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்