ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

🕔 September 19, 2019

க்கிய தேசிய முன்னணி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் இந்த விடயங்களை அவர் இன்று வியாழக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அந்தக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் அமைச்சர் பழனி திகாரம்பரம், மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரும், சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஐக்கி தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிடம், மேற்படி அமைச்சர்கள் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்