சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

🕔 September 18, 2019

– முன்ஸிப் அஹமட் –

ஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே இதன்போது கைப்பற்றப்பட்டன.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலை அடுத்து, பாலமுனை – துறைமுக வீதியில் அமைந்துள்ள வளவு ஒன்றிலுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அம்பாறை பொலிஸார் இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.

பாலமுனை – ஹுசைனியா நகரிலுள்ள வீடொன்றில் இருந்து கடந்த மே மாதம், சஹ்ரான் குழுவினருக்குச் சொந்தமான 35 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் சிலவற்றினையும் போலீஸார் கைப்பற்றியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments