அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

🕔 September 16, 2019

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஆவணத்தை, சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம், அந்த நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் அதிகாரி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.

குறித்த கோரிக்கை ஆவணத்தை சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதுவரலாயத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அனுப்பியிருந்தமை குறிப்பிடதக்கது.

Comments