ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

🕔 September 16, 2019

னாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் இதன்போது கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று பேருக்கும் விருப்பமானதொரு தினத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்