கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

🕔 September 14, 2019

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக புள்ளி கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரத நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொதிக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்து, கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொடுப்பதற்கு முற்பட்டபோது கைதான தனது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மாகந்துர மதுஷின் சகாவான கஞ்சிப்பான இம்ரான் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் நிலையில், அவருக்கு கைத் தொலைபேசிகள், சாஜர் உள்ளிட்டவற்றினை உணவுப் பொதிக்குள் மறைத்து வைத்து கொடுக்க முற்பட்ட போது, அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்பான செய்தி: ‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

Comments