திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

🕔 September 12, 2019

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

கொழும்பு – கங்காராமை விஹாரையில் காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெற்றது.

லிமினி வீரசிங்ஹ என்பவரை நாமல் திருமணம் செய்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவும் லிமினி வீரசிங்ஹவும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

லிமினியின் தந்தை திலக் வீரசிங்க சுற்றுலா, பயணத்துறையில் மிகப்பிரபலமிக்க வர்த்தகராவார்.

நாமல் ராஜபக்ஷவின் இளைய சகோதரர்கள் ஏற்கனே திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments