08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல்

🕔 September 5, 2019

பாறுக் ஷிஹான்

பாடசாலை   மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது

கடந்த  சனிக்கிழமை (31) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை, கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.

சம்பவ தினமன்று கல்முனைகுடியைச் சேர்ந்த 08 வயது மாணவி வீடு திரும்பிய வேளை, சந்தேக நபரான கல்முனைகுடி ஹனீபா வீதியை சேர்ந்த சந்தேக நபரான ஏ. கரீம் (55 வயது) மேற்படி மாணவியை அழைத்து தனக்கு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி வருமாறு கோரியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டுக்கு சென்று வழங்கியுள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் போது, சந்தேக நபர்  தப்பி  சென்றுள்ளார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு   பரவ ஆரம்பித்த போது, அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்து அவரைத் தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்