மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

🕔 September 3, 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“நாட்டுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கிறார்கள்? மக்களுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கிறார்கள்” என கேள்வி எழுப்பினார். 

மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ள போதும், அதற்குரியபடி புதிய தொகுதிகளின் எல்லைகள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பழைய சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என, உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி வியாக்கியானம் கேட்டிருந்தமைக்கு இணங்க, அவ்வாறு முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments