பொறுப்புணர்வுடன் கருத்துக்களை சஜித் வெளியிட வேண்டும்: சரத் பொன்சேகா

🕔 September 3, 2019

மைச்சர் சஜித் பிரேதமதாச வௌியிடும் ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தான் ஜனாதிபதியானால் பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவேன் என்றும், இந்நாட்டு ஆண்கள் பத்திரிக்கை வாசித்துத் கொண்டிருக்க முடியும் என்றும் கூறினார்.

இந்நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாக கூறினார். அந்த 14 ஆயிரம் கிராமங்களுக்கும் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்வதாகவும் கூறினார். ஜனாதிபதி பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது 1825 நாட்கள். ஒரு கிராமத்துக்கு சென்றால் அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும். 

அவ்வாறான நிலையில், 24 மணித்தியாலங்களும் கிராமம் கிராமமாக சென்றாலும் 14 ஆயிரம் கிராமங்களுக்கும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே. 

அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் . இது பிரதேச சபை தேர்தல் இல்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்