ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ

🕔 September 2, 2019

க்கிய தேசியக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 06ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று, அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாலைதீவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன், ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பேசி, இதற்கான முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவித்த பின்னர், பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து, இந்த முடிவை மேற்கொள்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments