கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

🕔 September 1, 2019

க்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என்று, ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25 வருடங்களில் எதிர்கொண்ட தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்து பல அபிவிருத்திகளை நாட்டுக்கு செய்திருக்கின்றார். கட்டுநாயக்க, பிரயகம முதலீட்டு வலயம் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த கெளரவத்தை பாதுகாத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய காலம் வந்துள்ளது.

அவரின் தலைமைத்துவத்தால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. அதனால் அவர் தொடர்ந்தும் கட்சி தலைவராக இருப்பது பொருத்தம் இல்லை. 

அத்துடன் இலகுவான நபராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வுடன் செல்ல முடியாமல் போயுள்ளது. இறுதியில் அரசாங்கத்தை கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அதனால் ரணில் விக்ரமசிங்க தனக்கிருக்கும் கெளரவத்துடன் கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகி, இரண்டாம் நிலை தலைவர்களாக இருக்கும் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரி, நவீன் திஸாநாயக்க போன்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கவேண்டும்” என்று

Comments

புதிது பேஸ்புக் பக்கம்