முஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு எச்சரிக்கை

🕔 August 30, 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே தாங்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா நிகழ்வொன்றில் கூறியிருந்தமை தொடர்பாக, சமூக வலைத்தளத்தில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவாதம் யாரால், எப்போது வழங்கப்பட்டன என்பதையும், என்னன்ன உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன என்பதையும், அவை எழுத்து மூலமான உத்தரவாதங்களா என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று, தாவூத் நஸீர் என்பவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ள இந்த விடயத்தை குறிப்பிட்டு எழுதியுள்ள தாவூத் நஸீர்; ‘முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது தேர்தல்கால வெற்றுக் கோசமல்ல’ என விசனம் தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் காலத்தில் செல்லா வார்த்தைகளை அள்ளி வீசுவது போல், தங்களின் பதவியேற்பை நியாயப்படுத்தி, முஸ்லிம்களின் தலைகளை தயவு செய்து அடமானம் வைப்பதை ஏப்ரல்21க்குப் பிறகாவது அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’.

‘நாடாமன்ற உறுப்பினரிடம் வழங்கப்பட்ட உத்தரவாதங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ எனவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்