ஆயுதம் வைத்திருப்பதாகக் கைதான பாண்டிருப்பு நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 August 29, 2019

பாறுக் ஷிஹான்

ட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை நேற்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட. சந்தேக நபரை எதிர்வரும் செப்ரம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள  288\ஏ மாரியம்மன் கோயில் வீதி   பாண்டிருப்பு-2 பகுதி முகவரியாக கொண்ட தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

தொடர்பான செய்தி: புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

Comments