தலைப்புச் செய்திகள்

தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு

“கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமை தாங்கியமைக்காகஇ நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஊறுகொடவத்தையில் கொரிய – இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

இவ் வைபவத்தில் பிரதமர் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோகா, திறன் அபிவிருததி மற்றும் தொழிற் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன மற்றும் இலங்கை தொழில் பயிற்சி நிறுவனத் தலைவர் ரவி ஜயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து  இவ் வைபவத்தில் உரையாற்றுகையில்;

‘எங்கள் சவால்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நாம் நடுத்தர வருமானத்திலிருந்து உயர் வருமானம் பெறும் நாடாக முன்னேற வேண்டும். கொரியா – இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனமானது 26 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு கட்ட மேம்பாட்டு திட்டத்தில் முதல் கட்டமாக 17 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்இ கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை நிறைவு செய்துள்ளது.

கொரியா இந்த நிறுவனத்துக்கு பணத்தை மட்டுமல்லஇ அதி நவீன தொழில்நுட்ப திறன்களையும் வழங்கியுள்ளது. இந்த அனைத்து ஆதரவுக்கும் நாங்கள் கொரியாவுக்கு நன்றி கூறுகிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் “கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் கொரியா பொருளாதார மேம்பாட்டுஒத்துழைப்பு நிதியத்தின் ஆதரவுடன் இந்த திட்டத்திற்கான நிதியானது கொரிய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது.

அதிநவீன உலகளாவிய ஹைடெக் – ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், நியூமேடிக், ஹைட்ரோலிக்ஸ் மற்றும் சிஎன்சி நிரலாக்கங்களுக்கான டிப்ளோமா நிலை 5 வரை இலங்கையில் பயிற்சி அளிக்கும் ஒரேயொரு நிறுவனமாக கொரியா – இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனம் திகழ்கிறது.

அண்மையில் கொரியா – இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனமானது 15 இலங்கை பயிற்றுவிப்பாளர்களுக்கு 10கொரிய நிபுணர்களால் பயிற்சியினை மேற்கொண்டது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பதியுதீன்; உலகளாவிய திறன் அட்டவணையில் இலங்கையின் நிலையை வலியுறுத்தினார்.

“எந்தவொரு நாட்டினதும் தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்குமிடையிலான வலுவான உறவை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாண்டும் திறனை பொறுத்தவரை உலகளாவிய தர வரிசையை இலங்கை மீண்டும் வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டது”.

“2019 குளோபல் டேலண்ட் போட்டித்திறன் குறியீட்டில் நாங்கள் 82 வது இடத்தில்உள்ளோம். எந்த மாற்றமும் இல்லாமல் 2017 முதல் அதே நிலையில் தொடர்கிறோம். இந்தியாவைத் தவிர, தெற்காசிய நாடுகளை விட இலங்கை உயர்ந்த இடத்தில் உள்ளது.

இந்த மாறாத தரவரிசை நமது தேசிய திறன் மேம்பாட்டு முயற்சிகள் செயல்படுவதைக் காட்டுகிறது. உலகெங்கிலும் சேவை ஏற்றுமதியும் கடந்தசில ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் இலங்கையின் சேவை ஏற்றுமதியும் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல திறன் பயிற்சியானது, இந்த துறையும் வளர உதவும்” என்றார்.